×

அணைக்குடம் கிராமத்தில் தைலமரத்தோப்பில் தீ

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் உள்ளது அரசுக்கு சொந்தமான தைலமர தோப்பு உள்ளது. இந்த தைலமர தோப்பு சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்நிலையில் இந்த தைலமர தோப்பின் குறுக்கே மின்கம்பிகள் பதிக்கப்பட்டு மின்கம்பிகள் வழியாக மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில் உள்ளதாலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மின் கம்பிகளின் மூலம் உராய்வு ஏற்பட்டு தீ பொறி மூலம் கீழே உள்ள தைல மர சருகுகள் மூலம் தீ பற்றி எரிய துவங்கி உள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காற்றில் இருந்து புகை வருவதை பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் தீ பற்றி எரிவதால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக அருகில் உள்ள கிராம மக்களும் சம்பவ இடத்திற்கு வந்து தழைகளை உடைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். செந்துறை தீயணைப்பு நிலையத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறையினர் தைலம் மர தோப்பில் ஏற்பட்ட தீயினை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆகையால் இது போன்று விபத்துக்களை ஏற்படும் வகையில் தைலமர தோப்பு பகுதியில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Damkudam ,
× RELATED தா.பழூர் அருகே சாலை ஓரம் கொட்டப்பட்ட பூக்கள்